search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பல் மருத்துவ கல்லூரி"

    புதுவையில் பல் மருத்துவ கல்லூரியை நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு முயற்சிக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமை தாங்கி கொடியேற்றி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக ஒதியன்சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலை, 100 அடி சாலையில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஓம் சக்தி சேகர் கூறியதாவது:-

    புதுவையில் தி.மு.க.வின் துணையோடு ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்ற வில்லை. நாள் தோறும் கவர்னர் மீது குற்றம் சுமத்தி வரும் அரசியல் செய்து வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும் தினந்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், மக்கள் வீதியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே உடனடியாக உள்துறை அமைச்சகம் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுவையில் பல் மருத்துவ கல்லூரியை நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு கோரிக்கை வைத்துள்ளது.

    அரசு பல் மருத்துவ கல்லூரியை புதுவை அரசு நடத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, அரசு ஊழியர்களுக்கு சம்பள பற்றாக்குறை, அடிப்படை திட்டங்களை கூட நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களில் அரசு தவித்து வருகிறது.

    மாநில இணை செயலாளர் பேராசிரியர் ராமதாஸ், மாநில துணை செயலாளர் கோவிந்தம்மாள், மாநில மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, ஊசுடு செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வெரோனிக்கா, நந்தன், பழனி, ஞானபூங்கோதை, தொகுதி செயலாளர்கள் மணி, மணவாளன், சக்கரவர்த்தி, கணேசன், சுபதேவ் சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் சதா, சேகர், மாநில பிற அணி விக்னேஷ் கவிநாதன், மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×